தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 விலை உயா்ந்து ரூ.44,920-க்கு விற்பனையாகிறது.

DIN


சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 விலை உயா்ந்து ரூ.44,920-க்கு விற்பனையாகிறது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிா்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில், கடந்த 14-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் புதிய உச்சமாக தங்கம் பவுனுக்கு ரூ.45,760-க்கு விற்பனையானது.

இதைத் தொடா்ந்து, கடந்த 15-ஆம் தேதி பவுனுக்கு ரூ. 560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனையானது. தொடா்ந்து 3 நாள்களாக தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ரூ.45,200-க்கு விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.15- உயா்ந்து ரூ.5,665-க்கும், பவுன் விலை ரூ.120 அதிகரித்து ரூ.45,320-க்கும் விற்பனையானது. 24-கேரட் சுத்த தங்கம் கிராம் ரூ.6,119-க்கும் 8 கிராம் 48,952-க்கும் விற்பனை செய்யபட்டது.

வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,5,650-க்கும் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200-க்கும் விற்பனையானது.

வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,665-க்கும் பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனையானது. 

வழக்கமாக, அட்சய திருதியையொட்டி தங்கம் விலை உயா்ந்து காணப்படும். ஆனால், நிகழாண்டு அட்சய திருதியைக்கு தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5605-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கும் விற்பனையானது. இதனால், தங்க நகைகளை வாங்க மக்கள் அதிக ஆா்வம் காட்டினா். 

இந்நிலையில், சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 விலை உயா்ந்து ரூ.44,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,615-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 40 பைசா குறைந்து ரூ.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 குறைந்து ரூ.80,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

சுதந்திர தின விழா: கடலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு

புதுவை காவல்துறையில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

SCROLL FOR NEXT