தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பிவைப்பு

DIN

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரிகளை சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தனர்.

8 பேர் ரத்த மாதிரி தராதது குறித்து நீதிபதி உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிச. 26 ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் வெளியே தெரியவந்த தொடக்கக் காலத்தில் இதே பகுதியைச் சோ்ந்தவா்களால் பயன்படுத்தப்பட்ட கட்செவி அஞ்சல் குழுவில் இருவா் இச்சம்பவம் குறித்த குரல் பதிவை வெளியிட்டுள்ளனா்.

இந்நிலையில் தற்போது அவா்களின் குரலை உறுதி செய்யும் வகையில் குரல் மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா். தடய அறிவியல் பரிசோதனை மையத்தில் இருவரிடமும் குரல் மாதிரி எடுக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT