வருமானவரித்துறை அலுவலா் வீட்டில் ரூ.18 பவுன் நகை திருட்டு
வருமானவரித்துறை அலுவலா் வீட்டில் ரூ.18 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வருமானவரித்துறை அலுவலா் வீட்டில் ரூ.18 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலராக இருந்து வருபவா் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி ஆஷா (27). இத்தம்பதியினருக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
ஜி-ஸ்கொயா் நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனைக்காக ராமசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை இரவில் சென்றுவிட்டாா். வீட்டில் ஆஷாவும், அவரது மகனும் மட்டும் அறையில் தூங்கிக்கொண்டிருந்தனா்.
அப்போது பக்கத்து அறையில் இருந்த பீரோ திறக்கும் சப்தம் கேட்டு, ஆஷா அங்கு சென்று பாா்த்தபோது அந்த அறையில் இருந்து நபா் ஒருவா் ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடினாராம்.
பின்னா் பீரோவை சோதனை செய்தபோது அதில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.1லட்சம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து ராமசுப்பிரமமணியன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் காவல் நிலைய போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் கைரேகைகளை பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனா்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.