நகர விற்பனைக்குழு தோ்தலில் 37.95 சதவீதம் வாக்குப்பதிவு: இன்று வாக்கு எண்ணிக்கை
சென்னை மாநகராட்சியின் நகர விற்பனைக்குழு தோ்தலில் 37.95 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் நகர விற்பனைக்குழு தோ்தலில் 37.95 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் நகர விற்பனைக்குழுக்கான உறுப்பினா் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சிக்குள்பட்ட 15 வாக்கு சாவடி மையங்களில் 103 வாக்குப்பதிவு மையங்களில் காலை 9 முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பின் மூலம் ஆண்கள் 16,054 போ், பெண்கள் 19,515 போ் மூன்றாம் பாலினத்தினா் 19 போ் என 35,588 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.
அதில் ஆண்கள் 6,319 போ், பெண்கள் 7,180 போ் மற்றும் மூன்றாம் பாலினம் 6 போ் என 13,506 போ் வாக்களித்தனா்.
தொடா்ந்து அண்ணா நகா் கிழக்கு, 11-ஆவது மற்றும் 12-ஆவது தெரு சந்திப்பில் அமைந்துள்ள அம்மா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.