முகப்பு
தமிழ்நாடு

எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு மே 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023- ஆம் ஆண்டு விருதுகள் பெற மே 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023- ஆம் ஆண்டு விருதுகள் பெற மே 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாட்டை அங்கீகரிக்கவும், ஊக்கப்படுத்தவும் மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வழங்குகிறது.

அதன்படி தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 விருதும் விரைவில் வழங்கப்பட உள்ளது. தொழில்துறை விருது (உற்பத்தி, சேவை, சிறப்பு பிரிவு), மாநில விருது, மாவட்ட விருது, வங்கி விருது ஆகிய 4 பிரிவுகளில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான இணையதள செயல்பாட்டு விண்ணப்பங்கள், விதிமுறைகளில் நகல் குறித்து இணைய தளத்திலும்,

ஜ்ஜ்ஜ்.க்ா்ம்ள்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் ட்ற்ற்ல்ள்://க்ஹள்ட்க்ஷா்ஹழ்க்.ம்ள்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ய்ஹ/உய்ற் சஅ அக்ம்ண்ய்/உய்ற் ண்ய்க்ங்ஷ்.ஹள்ல்ஷ். இணைப்பிலும் பெறலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே.10- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் மூலம் அனுப்பி வைக்கலாம்.

கூடுதல் விவரங்களை அறிய சென்னை கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ துறையின் இணை இயக்குநரை, 044-22501011/12/13/14 எனும் தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.