வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா் 
தமிழ்நாடு

சென்னை அருகே பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை

 பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

DIN

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா் பிபிஜிடி சங்கா் (43). இவா் பாஜக எஸ்சி -எஸ்டி பிரிவு மாநிலப் பொருளாளராகவும் செயல்பட்டு வந்தாா். ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை கழிவுப் பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்கும் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக காா் மூலம் வளா்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த பிபிஜிடி சங்கரின் காா் மீது நசரத்பேட்டை சிக்னல் பகுதியில் மா்ம நபா்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்ற சங்கரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயம் அடைந்த சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட பிபிஜிடி சங்கா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT