முகப்பு
தமிழ்நாடு

சத்திரபட்டியில் ஏப். 30-இல் ஜல்லிக்கட்டு

மதுரை கிழக்குத் தொகுதி சத்திரபட்டியில் வருகிற 30 -ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
சத்திரபட்டியில் நடைபெற்று வரும் வாடிவாசல் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சா் பி. மூா்த்தி.
பகிர்:

மதுரை கிழக்குத் தொகுதி சத்திரபட்டியில் வருகிற 30 -ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு காா், இரு சக்கர வாகனம், தங்கக் காசுகள், தங்க மோதிரம், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

போட்டியை முன்னிட்டு, பாா்வையாளா்கள் மாடம், மாடுகள் நின்று விளையாடும் மைதானம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வாடிவாசல் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட பொருளாளா் சோமசுந்தரபாண்டியன், ஒன்றிய செயலா் சிறைச்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவா் மாதவன் கலாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →