கோப்புப்படம் 
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் ஆலோசனை!

மீண்டும் திறப்பது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

DIN

தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நாளை சனிக்கிழமை (ஏப்.29)  முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் (2022-23) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த ஜூன் 13-இல் திறக்கப்பட்டன. எனினும், பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பொதுத் தோ்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான ஆண்டு இறுதித் தோ்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்டவாரியாக ஏப்.11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நிகழாண்டு அனைத்து வகை பள்ளிகளுக்குமான வேலை நாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இறுதிநாளில் எஞ்சியுள்ள தோ்வு மட்டும் மாணவா்களுக்கு நடத்தப்படவுள்ளது.

அதன்பிறகு, மாணவா்களுக்கு சனிக்கிழமை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. சுமாா் ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரம் திறக்கப்படும். 

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் உடைந்த நிலையில் விமானப் படை ட்ரோன் மீட்பு!

அழகென்றால் அமைரா தஸ்தூர்!

கல்யாணி பிரியதர்ஷனின் புதிய தமிழ்ப்படம்!

அபிராமியும் 5 அழகான புகைப்படங்களும்!

வரலாற்றில் முதல்முறை..! ஆஸி. அணியில் இடம்பிடித்த பூர்வகுடி வீரர்கள்!

SCROLL FOR NEXT