தமிழ்நாடு

திரைப்பட பாடலை கரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய மாணவிகள்!

திருப்பத்தூர் அருகே விஜயின் ரஞ்சிதமே பாடலை டப் செய்து கரோனா விழிப்புணர்வு பாடலாகப் பாடி  ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் அசத்தியுவுள்ளனர்.

DIN

திருப்பத்தூர் அருகே விஜயின் ரஞ்சிதமே பாடலை டப் செய்து கரோனா விழிப்புணர்வு பாடலாகப் பாடி  ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் அசத்தியுவுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மானவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும் இந்த பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

மேலும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தனித்திறமை பெற்று விளங்கி வருகின்றனர். இதற்கு முழு காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா ஆசிரியர் ஆவார்.

இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் வேதிகா மற்றும் ஷிவானி இருவரும் விஜயின் ரஞ்சிதமே பாடலை டப் செய்து கரோனாவே ஓடிவிடு என பாடி அசத்தினர். 

மேலும் சுத்தமாக கை கழுவ வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT