தமிழ்நாடு

இறந்த மகளின் ஜீவனாம்சத்தை தாய் பெற உரிமையுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்

DIN

இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவைத்தொகை பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுராந்தகத்தைச் சேர்ந்த அண்ணாதுறை-சரஸ்வதி தம்பதி விவாகரத்து பெற்ற நிலையில், ஜீவனாம்சமாக மாதம் ரூ.7,500 வழங்க அண்ணாதுரைக்கு மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 6.22,500 பாக்கி தொகையை வழங்க கோரிய சரஸ்வதியின் மனு நிலுவையில் இருந்தபோது சரஸ்வதி மரணமடைந்துவிட்டார். 

சரஸ்வதி மரணமடைந்ததால், தாயார் ஜெயாவை வழக்கில் இணைத்ததை எதிர்த்து அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவைத்தொகை பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.  

அத்துடன் அண்ணாதுரை தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT