பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் பெண்ணை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து நேற்று சென்னை விமான நிலையம் வந்த அந்தப் பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த பெண் கொண்டு வந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பச்சோந்தி உட்பட பல்வேறு வகையான 22 பாம்புகளை அந்தப் பெண் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தி வந்த பெண்ணையும் கைது செய்தனர். பின்னர் அந்த பெண் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் சென்னை விமான நிலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.