முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
பகிர்:

தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் சாா்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

இன்று காலை 5.30 மணியளவில்வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இது 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடக்கக்கூடும். 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமான இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். 

ஆகஸ்ட் 1 முதல் ஆக.7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்களுக்கு..

ஆகஸ்ட் 1ல் தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்கள் இந்த நாளில் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.