கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
அவிநாசி அருகே நாதம்பாளையத்தில், கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை உயிருடன் மீட்டனர்.
அவிநாசி அருகே நாதம்பாளையத்தில், கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை உயிருடன் மீட்டனர்.
அவிநாசி அருகே நாதம்பாளையம் புளியங்காடு தோட்டத்து பகுதியில் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில் புதன்கிழமை பசுமாடு தவறி விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவிநாசி தீயணைப்புத் துறை நிலை அலுவலர் வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திக்கும் மேலாக போராடி, பசு மாட்டை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.