heat082743 
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

ஆக.3, 4-ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமான இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். 

ஆகஸ்ட் 2 முதல் ஆக.8 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

ஆகஸ்ட் 3-ல் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த நாளில் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

வேன் பதிப்புக்கு... ராகுல் பேச்சால் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT