தமிழ்நாடு

சுருளி அருவியில் 3வது நாளாக முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்!

DIN


கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் 3 ஆவது நாளாக யானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

தேனி மாவட்டம் சுருளி அருவி ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. கடந்த புதன்கிழமை 2 குட்டிகளுடன் 8 யானைகள் அருவியின் அடிவாரப்பகுதியில் கருப்பசாமி கோயில் அருகே முகாமிட்டது. யானைக் கூட்டத்தை கண்காணித்த புலிகள் காப்பகத்தினர் அருவியில் குளிக்கத் தடை விதித்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் அதே யானைக்கூட்டம், அந்த பகுதியிலேயே தொடர்ந்து 3ஆவது நாளாக முகாமிட்டுள்ளது தெரியவந்தது. யானைகூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணித்த வனத்து றையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க தடையை நீட்டித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

சி.ஏ.பவுண்டேஷன் படிப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT