தமிழ்நாடு

சுதந்திர தின விழா ஒத்திகை தொடக்கம்! போக்குவரத்து மாற்றம்!!

சுதந்திர நாளையொட்டி சென்னை மெரினாவில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

DIN


சுதந்திர நாளையொட்டி சென்னை மெரினாவில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

76வது சுதந்திர நாளையொட்டி தமிழ்நாட்டில் ஒத்திகை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. மொத்தம் மூன்று நாள்களுக்கு ஒத்திகை நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 4, 10, 13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 

கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவல் படை உள்ளிட்ட 7 படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். 

ஆகஸ்ட் 10, 13 ஆகிய நாள்களில் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெறவுள்ளது. 

ஒத்திகை நடைபெறும் நாள்களில்  காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நேப்பியா் பாலத்திலிருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT