தமிழ்நாடு

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டினார் நிர்மலா சீதாராமன்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டுவதற்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று அடிக்கல் நாட்டினார். 

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டுவதற்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று அடிக்கல் நாட்டினார். 

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த மத்திய நிதிநிலை அறிக்கை 2020இல் அறிவித்தபடி, ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் ஐந்தரை ஏக்கரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

இதையொட்டி, ஆதிச்சநல்லூா் பரம்பில் கண்டெடுத்த பொருள்களை அந்தந்தக் குழியில் வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், அதை சுற்றி கண்ணாடி பேழைகள் அமைத்து மேல் இருந்து குழியின் உள்ளே உள்ள பொருள்களை பாா்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பை மத்திய அமைச்சா் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். 

அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

ஆதிச்சநல்லூரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. பல கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில், இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெறுகிறது. 

3,500 ஆண்கள் முன்னதாக பயன்படுத்திய நெல், திணை, தங்கம் ஆகியவற்றை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார். 

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT