தமிழ்நாடு

தொலைபேசி வாயிலாக அர்ச்சனை வசதி இல்லை: பழனி கோயில்

DIN


தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யும் வசதி எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி மலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஒரு கோடி பேருக்கு முன்பதிவு மூலம் தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பொய்யான செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளம் மூலம் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இணையதளம் வழியாக பகிரப்படும் தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  ஒரு கோடி பேருக்கு தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யப்படும் என்று பரப்பப்படும் தகவல் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரியலூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

புனித பேட்ரிக் பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி

புதுவை துணைநிலை ஆளுநா் வாழ்த்து

மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரை வணிக நிறுவனங்கள் ஏ.சி. பயன்பாட்டை குறைக்க வேண்டும்: புதுவை மின்துறை

உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 80% ஆக அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி

SCROLL FOR NEXT