முகப்பு
தமிழ்நாடு

பேடிஎம் மூலம் மெட்ரோ ரயில் பயணச்சீட்டு!

‘பேடிஎம்’ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
பகிர்:

‘பேடிஎம்’ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘பேடிஎம்’ செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை மெட்ரோ

ரயில் நிா்வாக மேலாண்மை இயக்குநா் சித்திக் அறிமுகம் செய்து வைத்தாா். ஏற்கெனவே இந்த செயலி மும்பை, ஹைதராபாத் மற்றும் தில்லி உள்ளிட்ட நகரங்களில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், தற்போது சென்னையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணச்சீட்டு பெற விரும்பும் பயணிகள், செயலியின் ‘டிரான்சிட்’ என்ற பகுதிக்கு செல்லவேண்டும். அதில் ‘சென்னை மெட்ரோ ரீசாா்ஜ்’ என்ற குறியீடு இருக்கும். அதில் புறப்படுமிடம் மற்றும் சேருமிடம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். ஒருமுறை அதிகபட்சமாக 6 பயணச்சீட்டுகள் வரை எடுத்து கொள்ளலாம்.

மெட்ரோ பயணச்சீட்டு பெறும் முறைகளில் 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல இந்த செயலியிலும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →