தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தது அமலாக்கத் துறை!

DIN


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். 

முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து புழல் சிறையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்தது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்த்ரவிட்டிருந்தது. 

செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தனர்.

அதில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் அல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை விசாரணைக்காக காரில் அழைத்துச்சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

SCROLL FOR NEXT