தமிழ்நாடு

ஆக. 25 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

DIN

தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வருகிற ஆகஸ்ட் 25 முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. 

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற ஆகஸ்ட் 25 முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்குவளையில் இந்த திட்டத்தினை தொடங்கிவைக்கிறார். 

இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் நகா்ப்புற, கிராமப்புறப் பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவ, மாணவியா் பயன்பெறுவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் வழிப்பறி: சிறுவன் உள்பட 4 போ் கைது

பெருங்களத்தூா் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டத்தைக் கைவிடக்கூடாது: ராமதாஸ்

குண்டு மல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

மின் தடை: பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரியில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT