கைது செய்யப்பட்ட மீனவர்கள் 
தமிழ்நாடு

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

DIN

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் 9 பேரை கைது செய்தனர்.

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இன்று காலை 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 9 மீனவர்களையும் தமிழகம் அனுப்புவதற்கான பணிகளை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.பி.யில் குழந்தைகள் பலி: மேலும் 2 இருமல் மருந்துகளுக்குத் தடை!

2001 இதே நாளில்... அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த மோடி!

மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!

உடல் பருமன் இருந்தால் மறதி ஏற்படுமா? - ஆய்வில் முக்கிய தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT