தமிழ்நாடு

சுருளிஅருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி

DIN

கம்பம்: தேனி மாவட்டம், சுருளிஅருவியில் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அனுமதி அளித்தனர்.

தேனி மாவட்டத்தில் புகழ் பெற்றது சுருளிஅருவி. இந்த அருவி ஆன்மீகத்தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த ஆக.2ல், 2 குட்டிகளுடன் 8 யானைகள் சுருளிஅருவிக்கு செல்லும் வழியில் முகாமிட்டது. 

யானைகளின் நடமாட்டத்தை பார்த்த வனத்துறையினர் அருவியில் குளிக்க மற்றும் வளாகப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

7 நாள்களாக முகாமிட்ட யானைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகாலை உள் வனப்பகுதிக்கு சென்றது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்த வனத் துறையினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதியளித்தனர். சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.

இதுபற்றி கம்பம் கிழக்கு வனச்சரகர் வி.பிச்சைமணி கூறியது, 7 - ஆவது நாளில் யானைக்கூட்டம் உள் வனப்பகுதிக்கு சென்றுள்ளது. அதனால் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இருந்தாலும் அருவி வளாகப்பகுதி, தேக்கங்காடு, வெண்ணியாறு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் வன ஊழியர்கள் கண்காணிப்பு செய்து வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT