ஆரோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை!
புதுச்சேரிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு வருகை தந்தார்.
புதுச்சேரிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு வருகை தந்தார்.
குடியரசுத்தலைவருக்கு ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் ஜெயந்தி எஸ்.ரவி பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். .தொடர்ந்து ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்திர்மந்திருக்குச் சென்று தியானம் மேற்கொண்டார்.
பின்னர் ஆரவிந்தரின் 150- ஆண்டு பிறந்தநாளையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.