கோப்புப்படம் 
தமிழ்நாடு

தக்காளி ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை!

தமிழகத்தில் சுமாா் 45 நாள்களுக்கு மேலாக தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தக்காளியின் விலை தற்போது குறைந்து, அனைத்து இடங்களிலும் ரூ.70-க்கு கீழ் விற்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். 

DIN

தமிழகத்தில் சுமாா் 45 நாள்களுக்கு மேலாக தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தக்காளியின் விலை தற்போது குறைந்து, அனைத்து இடங்களிலும் ரூ.70-க்கு கீழ் விற்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். 

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாள்களாக சரிந்து இன்று ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு, காய்கறி சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம் மற்றும் அருணாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வழக்கமாக 60 லாரிகளுக்கு மேல் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். 

இந்த நிலையில், தக்காளி பயிரிடப்படும் மாநிலங்களில் தொடா்ச்சியான மழை பெய்து வந்ததால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, சராசரியாக 25-35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்காக வந்தது. இதனால் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வெளிச் சந்தைகளில் ரூ.210 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தற்போது பல மாநிலங்களில் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த சில நாள்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. 

வியாழக்கிழமை நிலவரப்படி, கோயம்பேடு சந்தைக்கு 700 டன் தக்காளி வந்துள்ளதால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஏறுமுகமாகவே இருந்து வந்த தக்காளியின் விலை தற்போது குறைந்து, அனைத்து இடங்களிலும் ரூ.80-க்கு கீழ் விற்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். 

தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அடுத்த வாரத்தில் தக்காளி விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

SCROLL FOR NEXT