தமிழ்நாடு

தொடர் விடுமுறை... கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN


சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று வெள்ளிக்கிழமை (ஆக.11) மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மெட்ரோ ரயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT