முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் இன்று சிறைக்கு செல்லும் செந்தில் பாலாஜி!

அமைச்சா் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த நீதிமன்றம் அளித்த கால அவகாசம் சனிக்கிழமை (ஆக.12) நிறைவடைகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
செந்தில் பாலாஜி
பகிர்:

அமைச்சா் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த நீதிமன்றம் அளித்த கால அவகாசம் சனிக்கிழமை (ஆக.12) நிறைவடைகிறது. இதையடுத்து அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளாா்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சா் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த 5 நாள்கள் அனுமதி அளித்து, கடந்த 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினா் கடந்த திங்கள்கிழமை முதல் விசாரணை செய்து வருகின்றனா். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், செந்தில் பாலாஜியிடம் வழக்குத் தொடா்பான பெரும்பாலான கேள்விகளை கேட்டு, பதில்களை பெற்றுவிட்டனா்.

செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்ய நீதிமன்றம் அளித்த காலஅவகாசம் சனிக்கிழமையுடன் (ஆக.12) முடிவடைகிறது. இதனால் மாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினா் ஆஜா்படுத்தி,புழல் சிறையில் அடைக்கின்றனா்.

அதேவேளையில் செந்தில் பாலாஜியிடம் மேலும் சில நாள்கள் விசாரணை செய்ய அனுமதி கேட்டு அமலாக்கத்துறை புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →