முகப்பு
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை: முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:48 AM
பகிர்:

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

இதையொட்டி, விண்ணப்பப் பதிவுக்கான முதல்கட்ட முகாம்கள் ஜூலை 24-இல் தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற்றன. கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட பதிவு ஆகஸ்ட் 16 வரை நடைபெற உள்ளன. 

Advertisement

சுதந்திர தினம், கிராம சபைக் கூட்டங்கள் காரணமாக, கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான முகாம்கள் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறாது. இதற்குப் பதிலாக, 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் நடைபெறும் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பதிவு பணி, பயனாளிகளை தேர்வு செய்தல் என திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments