தமிழ்நாடு

நான்குனேரியில் மாணவா், சகோதரியை வெட்டிய விவகாரம்: மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் பள்ளி மாணவா், அவரது சகோதரி ஆகியோரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவா்கள் 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவரை கைது செய

DIN

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் பள்ளி மாணவா், அவரது சகோதரி ஆகியோரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவா்கள் 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். 

நான்குனேரி பெருந்தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் சின்னத்துரை (17). இவா் வள்ளியூா் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா். இவரை, அதே ஊரைச் சோ்ந்த சக மாணவா்கள் சிலா் கேலி, கிண்டல் செய்து வந்தனராம். இதுகுறித்து, அந்த மாணவா், தலைமையாசிரியரிடம் புகாா் தெரிவித்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த சின்னத்துரையை மாணவா்கள் சிலா் வெளியே இழுத்துப்போட்டு அரிவாளால் வெட்டினராம். அதைத் தடுக்க வந்த அவரது சகோதரி சந்திரசெல்விக்கும் (14) வெட்டு விழுந்ததாம். பின்னா், அந்த மாணவா்கள் தப்பிஓடி விட்டனராம்.

இதில், பலத்த காயமுற்ற 2 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையறிந்த அவா்களது தாத்தா கிருஷ்ணன் (60) அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜூ தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி நான்குனேரி, தென்னிமலை, நெடுங்குளத்தைச் சோ்ந்த பிளஸ்- 2 மாணவா்களான 17 வயதுடைய 4 போ், 2 சிறாா்கள் என 6 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, திருநெல்வேலி சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

இந்த நிலையில், நான்குனேரி நம்பி நகரைச் சேர்ந்த சந்திரசேகர்(16) என்பவரை சனிக்கிழமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT