தமிழ்நாடு

சன்சத் தொலைக்காட்சி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது : திருச்சி சிவா

பிரதமர் மோடி பேசியபோது எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பை சன்சத் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை: திருச்சி சிவா

DIN

மத்திய அரசின் சன்சத் தொலைக்காட்சி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியபோதுகூட சன்சத் தொலைக்காட்சி காட்டவில்லை. பிரதமர் மோடி பேசியபோது எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பை சன்சத் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்வது சரியா? தவறா? என்பதை மக்கள் முடிவு செய்துகொள்ளட்டும். மக்களவை, மாநிலங்களவையில் சட்டம் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டதாக வரலாற்றில் இல்லை. 

இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சிக்கு வரும். அப்போது நீட் தேர்வு முடிவுக்கு வரும். ஜெயலலிதா விவகாரம் குறித்து ஒன்றும் அறியாமல் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதுதான் நிர்மலா சீதாராமன் அமைச்சராக இருக்கிறார் என்பதே தெரியவந்தது. 

மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை உரிமைக் குழுவுக்கு அனுப்புவதன் மூலம் மத்திய பாஜக அரசு மிரட்டல் விடுக்கிறது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT