காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறையினரின் விளையாட்டு மைதானத்தில் சுதந்திர நாள் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மேகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக திறந்த ஜீப்பில் எஸ்.பி. எம்.சுதாகர் உடன் ஆட்சியர் சென்று போலீசாரின் அனுபவப்பு மரியாதையை பார்வையிட்டார்.
பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை நிற புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்க விட்டார். இதனைத் தொடர்ந்து அரசின் சார்பில் ரூ.3.55 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் சிறந்த அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவ்விழாவில் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் சே வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.