கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக.21 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஆகஸ்ட் 21 வரை மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

DIN

தமிழகத்தில் ஆகஸ்ட் 21 வரை மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 

ஆக.15, 16 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்கள் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்கள் இந்த நாளில் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

SCROLL FOR NEXT