முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் செல்ஃபி எடுத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க சென்றவர் ஸ்ட்ரக்சரில் திரும்ப வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Updated On : 15 ஆகஸ்ட், 2023 at 8:34 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:19 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க சென்றவர் ஸ்ட்ரக்சரில் திரும்ப வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
 
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித் குமார் (25).தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி பழைய பேட்டையில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர், காட்டுநாயனப்பள்ளி முருகர் கோயிலுக்கு திங்கட்கிழமை மாலை சென்றார். சாமி கும்பிட்ட பிறகு,  கோவிலின் அருகே உள்ள மலைக்கு சென்றுள்ளார். அப்போது,  மலையின் உச்சியில் உள்ள பாறையின் மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்றார். 

அப்போது அங்கு வந்த குரங்குகள் கூட்டத்தைக் கண்டு அச்சத்தால்,  நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  கீழே விழுந்தவர், பாறைகளின் இடுக்கில் சிக்கிக்கொண்டதால்,  மீண்டு வர முடியவில்லை.

இதையடுத்து, இன்று அதிகாலை,, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த  தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, மூன்று மணி நேரம் போராடி,  அமித் குமாரை மீட்டு, ஸ்ட்ரெச்சர் மூலம் கீழே கொண்டுவந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisement

மலை உச்சியில் நின்று  செல்ஃபி எடுக்கச் சென்றவர் ஸ்ட்ரக்சரில் திரும்ப வந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.