முகப்பு
தமிழ்நாடு

மோடியின் குடும்பம் இந்தியா; வீடு செங்கோட்டை: கார்கேவுக்கு தம்பிதுரை பதில்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்தாண்டு வீட்டில்தான் கொடியேற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலளித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:50 AM
தம்பிதுரை(கோப்புப்படம்)
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி அடுத்தாண்டு வீட்டில்தான் கொடியேற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலளித்துள்ளார்.

தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றிய பிறகு பேசிய பிரதமர் மோடி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டையில் இருந்து உரையாற்றுவேன் என்றார்.

இதனை விமர்சித்த கார்கே, பிரதமரின் இந்த கருத்து ஆணவத்தை வெளிக்காட்டுவதாகவும்; அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில்தான் தேசியக் கொடி ஏற்றுவாா் என்றும் கூறினாா்.

இந்நிலையில், அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில்,

“பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவரின் குடும்பம் இந்தியாதான். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால், அடுத்தாண்டு அவரது வீட்டில் கொடியேற்றுவார் என்று கார்கே கூறியது சரிதான்.” என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →