தமிழ்நாடு

இளநிலைப் படிப்புகள்: 9,860 காலியிடங்களுக்கு ஆக.21 முதல் நேரடி சோ்க்கை

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள 9,860 இடங்களுக்கு ஆக.21 முதல் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள 9,860 இடங்களுக்கு ஆக.21 முதல் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இளநிலை பட்டப் படிப்புகளில், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன. இதற்கான, 2023-–2024-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கியது. இணையவழியாக மாணவா் சோ்க்கை ஜூலை மாதம் இறுதி வரை நடைபெற்றது. அதன்படி, ஒரு லட்சத்து 416 இடங்கள் நிரம்பின.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் 9,860 காலியிடங்கள் உள்ளன. இவற்றை, நேரடி சோ்க்கை மூலம் நிரப்ப உயா்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து உயா்கல்வித் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சோ்க்கை ஆக.21-ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது. இதுவரை நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை  www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT