நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை அரியலூர் செந்துறை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு இன்று பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க- அரக்கோணம் அருகே பழுதான விரைவு ரயில்: போக்குவரத்து பாதிப்பு
முன்னதாக நீட்டால் இறந்த மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய கௌதமன் மீது வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.