முகப்பு
தமிழ்நாடு

மணலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மூச்சுத் திணறி பலி

சென்னையை அடுத்த மணலி அருகே மாத்தூர் பகுதியில், வீட்டுக்குள் ஏற்பட்ட தீ விபத்தில், மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்தனர்.

Updated On : 19 ஆகஸ்ட், 2023 at 1:04 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: சென்னையை அடுத்த மணலி அருகே மாத்தூர் பகுதியில், வீட்டுக்குள் ஏற்பட்ட தீ விபத்தில், மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்தனர்.

இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது அறையில் இருந்த மின் விசிறியில் தீப்பற்றியதில், அவர்கள் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை தெரிவித்த தகவலில், பலியானவர்கள், சந்தானலட்சுமி (65), அவரது பேத்திகள் சந்தியா (10), பிரியா (8), பவித்ரா (8) ஆகிய நான்கு பேரும் மூச்சுத் திணறி பலியானதாகக் கூறப்படுகிறது.

Advertisement

அவர்கள் படுத்திருந்த அறையில், அனைத்து மின் ஒயர்களும் எரிந்த நிலையில் உள்ளது. அனைவரது உடல்களும் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் கூறாய்வுக்குப் பிறகே அவர்களது மரணம் குறித்து தகவல் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த வீட்டுக்கு எதிர்வீட்டில்தான், பலியான 2 குழந்தைகளின் தாயார் வசித்து வருகிறார். அவர் காலை 5 மணிக்கு பிள்ளைகளை எழுப்ப கதவைத் தட்டியபோதுதான் யாரும் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, அனைவரும் இறந்திருந்தது தெரிய வந்தது.

பலியான குழந்தைகளின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டில் சிகிச்சை எடுத்து வருவதால், குழந்தைகள் அருகில் இருக்கும் பாட்டி வீட்டில் இரவு உறங்கச் செல்வது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.