சிப்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.  
தமிழ்நாடு

அவிநாசி அருகே சிப்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN


அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

அவிநாசி அருகே தெக்கலூர் புதுப்பாளையம் நத்தகாட்டுபிரிவில் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிப்ஸ்கள் அடுக்கி வைத்துள்ள 128 அடி நீளம் 80 அடி அகலம் கொண்ட குடோன் முழுவதும் தீ பரவியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறை வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சிப்ஸ்கள் முழுவதும் எரிந்து நாசமானது. 

இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT