முகப்பு
தமிழ்நாடு

நாங்குநேரி பள்ளி மாணவரிடம் கனிமொழி எம்.பி. நலம் விசாரிப்பு

நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரையை நேரில் சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி நலம் விசாரித்துள்ளார்.

தமிழ்நாடு

நாங்குநேரி பள்ளி மாணவரிடம் கனிமொழி எம்.பி. நலம் விசாரிப்பு

நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரையை நேரில் சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி நலம் விசாரித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரையை நேரில் சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி நலம் விசாரித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் ஆக. 9-ஆம் தேதி இரவு காழ்ப்புணா்ச்சி காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் சின்னத்துரையும் அவரது சகோதரி சந்திரசெல்வியும் சக மாணவா்களால் தாக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 5 மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மாணவரை உள்நோக்கத்தோடு கேலி, கிண்டல் செய்ததுடன் தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்ததற்காக ஆயுதங்களால் தாக்கியுள்ளனா்.

இந்த நிலையில், நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரையை நேரில் சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையைச் சந்தித்து, உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தேன். 

குணமடைந்து வரும் அவர்கள் விரைவில் வீடு திரும்பி, தங்களது படிப்பை தொடர விழைகிறேன். நடந்த துயரச் சம்பவத்திலிருந்து, மனவலிமையோடு மீண்டுவரும் அக்குடும்பத்துடன் துணை நிற்பதாக உறுதியளித்தோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →