சென்னையில் விடியவிடிய கனமழை: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடுசென்னையில் விடியவிடிய கனமழை: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆலந்தூர், அண்ணாசாலை, தாம்பரம், அயனாவரம், பட்டினாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகரான திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் விடியவிடிய கனமழை பெய்து வருகின்றது.
இதையும் படிக்க | நிலவில் ஆய்வுப் பணியை தொடங்கியது ரோவர்!
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.