தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக  தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். 

DIN

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக  தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். 

அதிமுக பொதுக்குழு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்றும் அதுபோல கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கியது செல்லும் என்று கூறி ஓபிஎஸ் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக  தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதுபோல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இபிஎஸ் ஆதரவாளர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT