தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி!

DIN

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,000 கன அடியாக குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் காவிரி ஆற்றில் அதிகபட்சமாக விநாடிக்கு 17,000 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு கடந்த 10 நாட்களாக தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சரிந்து வரும் நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 7,000 கன அடியாக நீர்வரத்து குறைந்து தமிழக - கர்நாடக எல்லையான  பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல்கள் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளார். பரிசல்கள்  இயக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வார விடுமுறையான சனிக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT