தமிழ்நாடு

ஹெச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

DIN

சென்னை: பாஜகவின் ஹெச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பெரியார் சிலை உடைப்பது, அறநிலைத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாக பேசியது, திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியது உள்பட 11 வழக்குகள் ஹெச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி வெங்கடேஷ், “ஹெச்.ராஜா இதுபோன்று பேசுவது முதல்முறை அல்ல. அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் வழக்குகளை ரத்து செய்ய முடியாது.” என்று தெரிவித்தார்.

மேலும், பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து, 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT