காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது!
தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் தலைவர் எஸ்.கே.கல்தர் தலைமையில் தொடங்கியது.
தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் தலைவர் எஸ்.கே.கல்தர் தலைமையில் தொடங்கியது.
தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை நெற்பயிர் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு உடனடியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவின் அடிப்படையில் இறுதி முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் தில்லியில் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகம் தவிர புதுச்சேரி, கேரள மாநில அதிகாரிகளும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.