தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள். 
தமிழ்நாடு

காவிரி நீர் பிரச்னை: தஞ்சாவூரில் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்து விவசாய

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தரை நீக்கக் கோரியும், தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, ஆட்சியரக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர். 

பானைகளை காவடியாகத் தூக்கி வந்த விவசாயிகள்.

பானைகளுடன் காவடி:
இதேபோல, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கமன மாநிலத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள், குறுவை பயிரைக் காப்பாற்ற காவிரி நீர் கோரி பானைகளை காவடியாகத் தூக்கி வந்து ஆட்சியரிடம் மனு அளித்து முறையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெற்றோரைக் கொலை செய்த நபா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

கரும்பு தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு

வாகனங்கள் மோதல்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குண்டடம் அருகே மின்கம்பியில் உரசி வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

SCROLL FOR NEXT