கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அருகே வெல்டிங் செய்தபோது டேங்கர் லாரி வெடித்ததில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி புதன்கிழமை அதிகாலை பலியானார்.
மலுமிச்சம்பட்டி அருகே சண்முகம் என்பவர் லாரி வெல்டிங் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வேதிப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரில் வெல்டிங் விட்டு போயிருந்ததால், வெல்டிங் வைப்பதற்காக வந்துள்ளது.
இதனையடுத்து கடையில் வேலை செய்யும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வக்கீல்(வயது 38) லாரியின் டேங்கருக்குள் இறங்கி வெல்டிங் வைத்துள்ளார். உதவிக்காக வெளியே ரவி(வயது 20) என்பவர் நின்றுள்ளார்.
இந்த நிலையில், லாரியின் டேங்கர் திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது. இதில், வக்கீல் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெளியே நின்ற ரவி, பலத்த காயத்துடன் மதுக்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த கிணத்துக்கடவு தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மதுக்கரை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.