தமிழ்நாடு

விமான நிலைய மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

DIN


சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான  வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

சிக்னல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

சின்னமலை முதல் ஆலந்தூர் வரையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

தற்காலிகமாக விம்கோ நகர் முதல் சின்னமலை வரையில் நீல நிற (ஒற்றை வழித்தடம்) வழித்தடத்தில் மெட்ரோ இயக்கப்படுகிறது. ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரையில் லூப் லைனில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

அதாவது, விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் சென்று, ரயில் மாறி விமான நிலையம் செல்ல வேண்டும்.

பயணிகள் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT