தமிழ்நாடு

தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்: முதல்வர் ஸ்டாலின்

‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக குரல்பதிவுத் தொடரில் பேசவுள்ளார்.

DIN

சென்னை: ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக குரல்பதிவுத் தொடரில் பேசவுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் மக்களின் கேள்விகளுக்கு விடியோ வாயிலாக பதிலளித்து வந்தார்.

இந்த நிலையில், ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் குரல்பதிவுத் தொடரில் பேசவுள்ளதாக ட்விட்டரில்(எக்ஸ்) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,

“திராவிட முன்னேற்றக் கழகம் 75-ஆவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி.

தற்போது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024-இல் முடிய போகிற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படியெல்லாம் உருக்கிலைத்துள்ளார்கள் என்றும் எதிர்காலத்தில் நாம் உருவாக்கவுள்ள சமத்துவ சகோதரத்துவ இந்தியாவை பற்றியும் ஆடியோ தொடராக பேசவுள்ளேன்.  தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகமே சுழலுதே... ஸ்ரேயா கோஷல்!

செய்யறிவு பயன்பாட்டால் மின் தட்டுப்பாடு! கட்டணம் உயரும் அபாயம்?

இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்! மீண்டும் டிரம்ப்! எத்தனை முறை சொல்லியிருக்கிறார்?

ஆன்லைன் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை மோசடி! இளைஞர்களே இலக்கு!!

ஒடிசாவில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT