தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு!

DIN

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் 4,000-இல் இருந்து 400 கன அடியாகக் குறைக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை 1,431 கன அடியாகவும் உபரி நீர் வெளியேற்றம் 402 கன அடியாகவும் உள்ளது. 

ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏரியின் நீர்மட்டம் மொத்தமுள்ள 24 அடியில் 21.65 அடியாகவும் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் 3,028 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT