சிறுத்தைகள் கால் தடயங்கள் 
தமிழ்நாடு

அவிநாசி அருகே மீண்டும் 2 சிறுத்தைகள் நடமாட்டம்: வனத்துறையினர் ஆய்வு

அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

அவிநாசி: அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் காவல் நிலையத்துக்கு உள்பட்டது போத்தம்பாளையம் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பவர், வெள்ளிக்கிழமை காலை போத்தம்பாளையம் புலிப்பார்  சாலையில் 2 சிறுத்தைகள் சென்றதை பார்த்துள்ளார்.  மேலும் சிறுத்தைகள் இரண்டும் நாய்க்குட்டியை துரத்தி சென்றுள்ளதாகவும் மக்களிடையே கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பகுதியைச்  சேர்ந்த  மக்கள் வனத்துறையினர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரித்தனர். 

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் உள்ளிட்டோர் போத்தம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிறுத்தைகள் கால் தடயங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் வனத்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. 

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிநாசியில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போத்தம்பாளையம் அருகே பாப்பாங்குளம் பகுதியில் சிறுத்தை பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மந்திரம் போன்றது... ரசிகர்கள் குறித்து அனுபமா நெகிழ்ச்சி!

“அடிமைத்தனத்தைப் பற்றி பேசலாமா?” -இபிஎஸ் மீது முதல்வர் விமர்சனம்!

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

மலையுச்சியின் காற்றாக... சல்மா அருண்!

SCROLL FOR NEXT